Thursday, 25 February 2010

இலக்கணத்தில் புது விதிகள் !

திருமண மன்றம் !

அக்னியைச் சுற்ற கரம் பிடித்தோம்..
வெளியே திருமண தீ!
உள்ளே காதல் தீ!

உடம்பில் ஒவ்வொரு அணுவும் காந்தம் ஈர்த்ததைபோல்
உன்னை நோக்கி நகர்ந்தன...
மோகத்தீயை தூண்டின,பறந்து வந்து என் மேல் படர்ந்த கூந்தல் அலைகள்..
அதில் முகம் பதித்து உழ்ணம் ஏற்ற துடித்தது மனம்...
ஆகா... இது இரவா ? பகலா ?
மணமன்றமா ? மஞ்சமா ?
எங்கே நான் ?

நான் - நான் என்ற சொல்லே மறந்து போன மயக்க நிலை!
பல பத்தாண்டுகள் சேகரித்து வைத்த ஆசைக்குச் சொந்தமான
முகத்தை பார்த்த மயக்க நிலை!
என் அடுத்த தலைமுறையை உருவாக்க வந்தவளின்
கரம் பிடித்த மோக நிலை!

பிரபஞ்சம் - ஆண் வல்லினம்
பெண் மெல்லினம்!
மஞ்சம் - இயல்புகள் இடமாறிய தனி உலகம்.
நான் உன்னிடம் தஞ்சமான என் புது பிரபஞ்சம்!
இங்கே கரங்கள் தான் தலையணைகள் !
கண் தான் காம மொழி பேசும் வாய்!
வாய் - அது முத்த மழை பொழியும் ஊற்று!
பழமும்,பாலும் நம் நண்பர்கள்.
காற்று நம் எதிரி.

வா!
உயிரும் உயிரும்
மெய்யும் மெய்யும்
இணைய
இயற்றுவோம் புதியதோர் புணர்ச்சி விதி!
மரபு பிழைக்க ,இலக்கணம் பிழைக்க
கற்பனையால் பல கோடி இன்பங்களை
வென்றெடுப்போம் .
வா..........

No comments: